வேலணை பகுதியிலுள்ள கட்டாக்காலி மாடுகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுத்தார் அங்கஜன் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

வேலணை பகுதியிலுள்ள கட்டாக்காலி மாடுகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுத்தார் அங்கஜன் எம்.பி.

Jeyendra Habeeshan

வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடமாடி திரியும் கட்டாக்காலி மாடுகள் தொடர்பான பிரச்சனை தொடர்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு செல்லப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக இன்று (29) காலை வேலணை பிரதேச செயலகத்தில் கட்டக்காலி மாடுகள் தொடர்பான கூட்டத்தொடர் ஒன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தொடரில் வேலணை பிரதேச செயலாளர் அம்பலவாணர் சோதிவாணன், வேலணை பிரதே சபை தவிசாளர் நமசிவாயம் கருணாகர குருமூர்த்தி, அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தொடரில் தீவக பிரதேச செயலக எல்லைக்குள் நீண்டகால இடப்பெயர்வின் காரணமாக கைவிடப்பட்ட நிலையிலிருந்த கால்நடைகள் கடந்த 20 வருடங்களாக பெருகி ஆயிரக்கணக்கில் பிரதேசத்தில் உரிமை கோரப்படாத கட்டாக்காலி கால்நடைகளாக சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளமை தொடர்பாகவும் தீவக பிரதேச விவசாய நிலங்களை முழுமையாக பயன்படுத்தி தேசிய கொள்கைக்கு வலுச்சேர்ப்பதற்கு முயற்சிக்கும் விவசாயிகளின் விவசாய நிலங்களின் சேதம் தொடர்பாகவும், வீதிகளில் பயணம் செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்பவை தொடர்பிலும் கால்நடை வளர்ப்போர் தம் தரப்பி நியாயங்களை முன்வைத்தனர். 

இது தொடர்பில் அங்கஜன் இராமநாதனாலும் பிரதேச செயலகராலும் ஆராயப்பட்டு வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர்கள் அப்பகுதி கிராம சேவகர்கள் ஊடாக விண்ணப்பிக்கும் போது ஒரு குடும்பத்திற்கு 5 மாடுகள் வீதமும் 3000 ரூபாய் பாரமரிப்பு செலவும் வழங்கப்பட்டும் எனவும் பண்ணையாக உருவாக்கப்படும் போது 50 மாடுகள் வீதம் வழங்கப்படும் எனவும் எக்காரணத்திற்காகவும் வழங்கப்படும் மாடுகளை விற்க முடியாது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மதகுருமார்களால் அங்கஜன் இராமநாதனிடம் புங்குடுதீவு பாலத்தின் வீதியை விரைவாக புனரமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அடுத்த வருடம் வரவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களில் முன்னுருமைப்படுத்தப்பட்டு இவ் வீதி அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள சீபாரிசி செய்வேன் எனவும் அவ் வீதி மின்சார விளக்கு நிர்மாணிப்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாகவும் அங்கஜன் இராமநாதன் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad