பதுளை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு தகுதியற்ற அதிபர்கள் நியமனம் - அரவிந்தகுமார் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

பதுளை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு தகுதியற்ற அதிபர்கள் நியமனம் - அரவிந்தகுமார் எம்.பி.

பதுளை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்கும் போது தகுதிசார் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு தகுதியற்றவர்கள் பின் கதவால் அதிபர்களாக நியமிக்கப்படுகின்றமை குறித்து சமூக ஆர்வலர்கள் தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர்களின் கோரிக்கைக்கு அமைய கடந்த 19 ஆம் திகதி ஊவா மாகாண ஆளுநரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றதாகவும் அதற்கு கடந்த 24 ஆம் திகதி ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் கடிதம் ஒன்றின் ஊடாக சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதில் அதிபர் நியமனத்தின் போது நேர்முக பரீட்சை நடத்தி தகுதி அடிப்படையில் அதிபர்களை பதவியில் அமர்த்துமாறு அனைத்து கல்விப் பணிப்பாளர்களுக்கும் அவர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இனிமேல் தமிழ் பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்கும் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அரவிந்தகுமார் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment