இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக எச்.எம்.எம்.றியாழ் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 1, 2020

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக எச்.எம்.எம்.றியாழ்

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும், இயக்குனருமான எச்.எம்.எம்.றியாழ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் வேண்டுகோளுக்கிணங்க இன்று வியாழக்கிழமை (01) இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் "டங்கள் வைட்" கேட்போர் கூடத்தில் (Duncan White Auditorium) இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனக் கூட்டத்தின் நிருவாகத் தெரிவு இடம்பெற்றது.

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனக் கூட்ட நிருவாகத் தெரிவின் போதே உப தலைவராக செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும், இயக்குனருமான எச்.எம்.எம்.றியாழ் தெரிவு செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோவேடை கிராமத்தில் பிறந்த, இவர் பலதரப்பட்ட சமூக சேவைகளையும் மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக கல்வி மற்றும் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் இன்றுவரை செய்துகொண்டிருக்கின்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad