தென் கொரிய சர்வதேச அமைப்பு இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

தென் கொரிய சர்வதேச அமைப்பு இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

(எம்.மனோசித்ரா) 

இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தென் கொரியாவின் சர்வதேச அமைப்பொன்றினால் 22 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இன்று (28) சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் குறித்த தென் கொரிய சர்வதே அமைப்பின் தலைவரினால் இவை கையளிக்கப்பட்டன. 

சுகாதார பாதுகாப்பு ஆடைகள் 1008, பாதுகாப்பு கண்ணாடிகள் (Protective Goggle) 480, பாதுகாப்பு கையுறைகள் (Protective Gloves) 2000 என்பன இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

இலங்கையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் வழங்கப்படுகின்ற உதவிகளை மதிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதன் போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment