சிறைச்சாலைகளுக்குள் கொவிட் பரவலை தடுக்க விசேட வேலைத்திட்டம் - அவசரநிலை ஏற்பட்டால் வெலிக்கடை மருத்துவமனையை சிகிச்சை நிலையமாக மாற்ற திட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

சிறைச்சாலைகளுக்குள் கொவிட் பரவலை தடுக்க விசேட வேலைத்திட்டம் - அவசரநிலை ஏற்பட்டால் வெலிக்கடை மருத்துவமனையை சிகிச்சை நிலையமாக மாற்ற திட்டம்

சிறைச்சாலைகளுக்குள் கொவிட்-19 தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கத்துடன் அவசர திட்டம் அமுலாக்கப்படுகிறது. 

சிறைச்சாலைகளுக்குள் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்படும் பட்சத்தில் செயற்பட வேண்டிய விதமும் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கேற்ப துரித நடவடிக்கை எடுக்குமாறு ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொவிட்-19 தொற்றுப் பரவலை சமாளிப்பதற்கான வழிகாட்டல்கள் பற்றி சிறைச்சாலை பணியாளர்கள், சுகாதார சேவை வழங்கஞர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

கைதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல், கைதிகளை வெளி வேலைகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

அவசரநிலை ஏற்படுமானால் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையை சிகிச்சை நிலையமாக பயன்படுத்துவதற்கும் திட்டமிடப்படுகிறது.

No comments:

Post a Comment