பருத்தித்துறை - யாழ். தனியார் பேருந்து சேவை இடைநிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

பருத்தித்துறை - யாழ். தனியார் பேருந்து சேவை இடைநிறுத்தம்

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கரவெட்டி, இராஜ கிராமத்தைச் சேர்ந்த பலர் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி, இராஜ கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது. பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்த நிலையில் அவர் குறித்த கிராமத்தில் நடமாடியுள்ளார்.

இந்நிலையில் கரவெட்டி, இராஜ கிராமத்தில் 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த யாராவது தனியார் பேருந்து சேவையில் கடமையாற்றினால், பயணிகளுக்கு தொற்று ஏற்படலாம். அதனால், தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையோரைக் கண்டறியும் வகையில், பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன், ஐங்கரன் சிவசாந்தன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad