யானைகளை கட்டுப்படுத்த நிந்தவூரில் உப அலுவலகம் - பாரளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நடவடிக்கை! - News View

Breaking

Post Top Ad

Saturday, October 10, 2020

யானைகளை கட்டுப்படுத்த நிந்தவூரில் உப அலுவலகம் - பாரளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நடவடிக்கை!

கடந்த சில வாரங்களாக யானைகளினால் மக்கள் வசிக்கும் நிந்தவூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பல பொருள் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. 

இதனை கருத்திற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் இனிவரும் நாட்களில் அவ்வாறான பொருள் சேதங்களோ அல்லது உயிர் சேதங்களோ ஏற்படாத வண்ணம் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நிந்தவூர் பிரதேச செயலகத்தை மையப்படுத்தியவாறு சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான கோரிக்கையை வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநயக்காவிடம் முன்வைத்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இதற்கான நடவடிக்கையை உடனடியாக செய்து தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமிடம் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad