மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கொரோனா நிலமை தொடர்பாக (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து குறித்த தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கோட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில மக்கள் பாதுகாப்பபக இருக்குமாறும், சுகாதார நடைமுறைகளை அவசியம் கைக் கொள்ளுமாறும், களுவாஞ்சிகுடி பொலிசாரும், சுகாதார பிரிவினரும், பிரதேச சபையினரும், ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad