கருங்கற்களை வெடி வைத்து உடைக்கும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 11, 2020

கருங்கற்களை வெடி வைத்து உடைக்கும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

பதுளை தெமோதரைப் பகுதியின் நெதர்வில் பெருந்தோட்டத்திற்கு அருகாமையில் இருந்து வரும் கருங்கற்களை வெடி வைத்து உடைக்கும் செயற்பாட்டினை மறு அறிவித்தல் வரை உடனடியாக தடுத்து நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

பதுளை மாவட்ட புவி சரிதவியல் பணிப்பாளரினால் மேற்படி தடை உத்தரவு இன்று 11.10.2020 உத்தியோகபூர்வமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நெதர்வில் கற்பாறைகளை வெடி வைத்து தகர்த்ததினால் பல வீடுகள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன. அப்பகுதியில் செல்லும் பலர், பல்வேறு உபாதைகளுக்குள்ளாகியும் வருகின்றனர். 

குறித்த விடயம் தொடர்பில் பதுளை மாவட்ட புவி சரிதவியல் திணைக்களத்திடம் மேற்கொள்ளப்பட்ட புகாரையடுத்து திணைக்களப் பணிப்பாளர் தலைமையில் அப்பகுதிக்குச் சென்ற குழுவினர் மேற்கொண்ட முடிவிற்கமையவே மேற்குறிப்பிட்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad