பாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

பாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா!

பாராளுமன்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருப்பதையடுத்து, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது ஊடகவியலாளர்களை அனுமதிப்பதா என்பதையிட்டு ஆராயப்பட்டுவருவதாகத் தெரிகின்றது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் ஊடகவியலாளரிடம் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பெறுபேறுகள் கிடைக்கப் பெற்ற பின்னரே இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பாராளுமன்ற செய்தியாளர், 20 ஆம் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட தினத்தன்று செய்தி சேகரிப்பிற்காக பாராளுமன்றத்துக்கு சென்றுள்ளதால், அன்றையதினம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஊடகவியலாளர்கள் அனைவரையும் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு பாராளுமன்ற அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றின் பாராளுமன்ற செய்தியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 

குறிப்பிட்ட செய்தியாளருக்கு கொரோனா இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இரண்டாவது பரிசோதனை ஒன்றும் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த ஊடகவியலாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவருடன் நெருக்கமான ஊடகவியலாளர்கள், ஒன்றாக பயணித்த ஏனைய ஊடகவியலாளர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற செயலாளர் இன்றைய தினம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad