புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் நாளாந்தம் 9 மணி நேரம் திறந்திருக்கும் - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் நாளாந்தம் 9 மணி நேரம் திறந்திருக்கும்

புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள மொத்த வர்த்தக நிலையங்களை நாளாந்தம் காலை 5.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இன்றைய தினம் அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. வியாபாரிகள் கணிசமான அளவு பொருட்களை கொள்வனவு செய்ய வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் 50 சதவீத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தி மொத்த வர்த்தகம் இடம்பெறுவதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் சுகாதார பாதுகாப்புடன் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.

தட்டுபாடு இன்றி அனைத்து அத்தியவசிய பொருட்களும் புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad