71 ஆவது ஆண்டு இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக 14,654 பேருக்கு பதவி உயர்வு - News View

Breaking

Post Top Ad

Saturday, October 10, 2020

71 ஆவது ஆண்டு இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக 14,654 பேருக்கு பதவி உயர்வு

வெவ்வேறு தரங்களில் உள்ள 514 இராணுவ அதிகாரிகள் மற்றும் 14,140 சிப்பாய்கள் உள்ளிட்ட 14,654 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (10) 71 ஆவது இராணுவ ஆண்டு நிறைவு தினம் மற்றும் இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக, இப்பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால், முப்படைகளின் தளபதி மற்றம் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, இப்பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, 12 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 13 கேணல்கள் பிரிகேடியர் தரத்திற்கும், 47 லெப்டினன் கேணல்கள் கேணல் தரத்திற்கும், 58 மேஜர்கள் லெப்டினன்ட் கேணல் தரத்திற்கும், 234 கெப்டென்கள் மேஜர் தரத்திற்கும் , 99 லெப்டினன்கள் கெப்டென் தரத்திற்கும் மற்றும் 51 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் தரத்திற்கும் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பதவியுயர்த்தப்பட்டவர்கள் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இராணுவத் தளபதியினால் இராணுவ தினத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 14,140 இராணுவ சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 318 வொரன்ட் அதிகாரிகள் -2, வொரன்ட் அதிகாரி -1 தரத்திற்கும், 985 பதவி நிலை சார்ஜென்ட்ஸ், வொரன் அதிகாரி -2 தரத்திற்கும், 1292 சார்ஜென்ட்கள், ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்திற்கும், 3058 கோப்ரல்கள், சார்ஜென்ட் தரத்திற்கும், 3470 லான்ஸ் கோப்ரல்கள், கோப்ரல்கள் தரத்திற்கும் மற்றும் 4747 சாதாரன இராணுவச் சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல்கள் தரத்திற்கும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

71ஆவது இராணுவ ஆண்டு நிறைவு தொடர்பில் இராணுவ ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தி

No comments:

Post a Comment

Post Bottom Ad