அமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் மீட்பு : அம்பாறையில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

அமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் மீட்பு : அம்பாறையில் சம்பவம்

அமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி ஒன்று உட்பட அதற்கு பயன்படுத்திய 40 ரவைகளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப் படையினருக்கு நேற்று (17) மாலை கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய சாகாமம் பெரியதிலாவ ஊறக்கை பிரதேசமொன்றில் பிளாஸ்டிக் குளாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இத்தேடுதல் நடவடிக்கையானது திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.டபிள்யு.வி.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டதுடன் குறித்த துப்பாக்கி சுத்தம் செய்யப்பட்டு இயங்கு நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கைப்பற்றப்பட்ட ஆயுதம் மற்றும் ரவைகளையும் பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை நிருபர் ஷிஹான்

No comments:

Post a Comment

Post Bottom Ad