பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் - பெண் உள்பட 3 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் - பெண் உள்பட 3 பேர் பலி

பிரான்சில் தேவாலயத்தில் நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு பெண் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான். தன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அந்த நபர் கத்தியால் கொடூரமாக தாக்கினான். 

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் தேவாலயத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரான்ஸ் பொலிசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்தனர்.

பயங்கரவாதி நடத்திய இந்த கொடூர கத்திக்குத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒரு பெண்ணை தலை துண்டித்து கொலை செய்துள்ளான். மேலும், இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad