கொவிட்-19 வைரசு தகவல்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கம் - தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் 24 மணித்தியால சேவைகள் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

கொவிட்-19 வைரசு தகவல்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கம் - தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் 24 மணித்தியால சேவைகள்

கொவிட்-19 வைரசு தொடர்பான தகவல்களை 1999 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு கொவிட்-19 வைரசு தொடர்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்காக சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் 1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதற்கமைவாக கொவிட்-19 வைரசு தொற்றுக்குள்ளாவதை தவிர்ப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் போன்று வைரசு தொற்றுக்குள்ளானால் அதனால் தமது குடும்ப அங்கத்தவர்கள் அடங்கலாக ஏனையோருக்கும் அது பரவுவதை தடுக்கும் முறை தொடர்பான ஆலோசனைகளை இந்த துரித தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

இதேபோன்று சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளுடன் தமக்கு கொவிட்-19 வைரசு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்று உணர்ந்தால் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்கும் தேவையான உதவியை பெற்றுக் கொள்வதற்கும் உடனடியாக இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகள் மூலம் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் தமது ஆலோசனைகளைப் வழங்குவதற்காக இந்த சேவையுடன் இணைந்துள்ளனர்.

1999 துரித தொலைபேசி இலக்கத்துடன் எத்தகைய தொலைபேசி வலைப்பின்னல் ஊடாகவும் 24 மணித்தியாலங்களிலும் தொடர்பு கொள்வதற்கு பொதுமக்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad