17 அமைச்சுகளை தாமே ஏற்றுக்கொண்ட குக் நாட்டின் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

17 அமைச்சுகளை தாமே ஏற்றுக்கொண்ட குக் நாட்டின் பிரதமர்

குக் தீவின் புதிய பிரதமர் நாட்டின் முக்கிய 17 அமைச்சுகளை தாமே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வெளியுறவு, நிதி, குடிநுழைவு, எரிசக்தி என்று இன்னும் பல அமைச்சுகளையும் தாமே பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பிரதமர் மார்க் பிரவுன், நாட்டின் சட்டமா அதிபராகவும் உள்ளார்.

பிரதமருக்கு அமைச்சரவை மீது நம்பிக்கை இன்மையையே இது காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் டினா பிரவுன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் பதவி விலகியதை அடுத்து, பிரவுன் இம்மாதம் பிரதமராக பொறுப்பேற்றார்.

நியூசிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் குக் தீவுகளுக்கு சுயேச்சையாக அரசாங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. 

இருப்பினும் தீவைச் சேர்ந்தவர்கள் நியூசிலாந்தின் குடிமக்களாவர். பிரிட்டிஷ் மகாராணியே அரச தலைவராக உள்ளார். அதன் எல்லைகள் மாதக்கணக்கில் மூடி இருப்பதால், அது கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் இல்லாத இடமாக உள்ளது.

No comments:

Post a Comment