134 க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு - சாதனையின் உச்சத்தை தொட்டது கெகுணகொல்ல தேசிய பாடசாலை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

134 க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு - சாதனையின் உச்சத்தை தொட்டது கெகுணகொல்ல தேசிய பாடசாலை

றிம்சி ஜலீல்

2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளின் படி வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் கெகுணகொல்ல தேசிய பாடசாலை, விஞ்ஞான, கணிதப் பிரிவுகளில் மாத்திரம் சுமார் 134 க்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளதுடன் இவர்களில் 15 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக படசாலையின் அதிபர் சித்தீக் தெரிவித்தார்.

மேலும் கலைத்துறையில் 10 மாணவர்களும் தொழில்நுட்பத் துறையில் 24 மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர் மேலும் குறை நிறப்புத் தெரிவில் இன்னும் பல மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு கல்விப் பணியில் இப்படியானதெரு அடைவை அடைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 

எமது பாடசாலையையும் மாணவர்களையும் வரலாற்றுச் சிகரத்துக்குக் கொண்டு சென்ற கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் ஆசிரியர் குழாத்துக்கும், கண் விழித்தும் கூட்டிச் சென்றும் உதவிய பொற்றோர்களுக்கும், மேலதிக கல்வி வழங்கிய ASDA தனியார் கல்வி நிறுவானங்களின் இயக்குனர்கள் அதன் திறன்சார் ஆசிரியர்களுக்கும், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்களுக்குமே இப்பெருமைசேர் பாராட்டுக்களையும் நன்றிகளையும் ஆத்ம திருப்தியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment