மட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Friday, October 23, 2020

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா!

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் எஸ்.குணரெட்ணம் வழிகாட்டலில் விசேட வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இதன் ஓரங்கமாக பெகலியகொட மீன் வியாபார நிலையத்திற்கு வியாபார நடவடிக்கையின் பொருட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து சென்று வந்தவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றது.

இதில், 25 பேருக்கு அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டமைக்கிணங்க 11 பேருக்கு தொற்று உறுதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

குறித்த பி.சி.ஆர். பரிசோதனை நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.நசீர், எம்.ஏ.ஏ.நௌசாத், ஏ.அர்.எம்.ஹக்கீம், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad