தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை

மேல் மாகாணத்தில் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் மாவட்ட செயலாளர்களினூடாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நிதி அரசாங்கத்திடமிருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளார்.

நிவாரணப் பொருட்கள் இன்று அல்லது நாளை தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad