முஹம்மது நபி கேலிச் சித்திரம் - பிரான்ஸ் சஞ்சிகை மறுபதிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

முஹம்மது நபி கேலிச் சித்திரம் - பிரான்ஸ் சஞ்சிகை மறுபதிப்பு

முஹம்மது நபி தொடர்பான கேலிச் சித்தரங்களை பிரான்சின் கேலிச் சித்திர சஞ்சிகையான சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) மறுபதிப்புச் செய்துள்ளது.

2015 ஆம் ஆண்டு உயிர்ப்பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக அமைந்ததாக அக்கேலிச் சித்திரம் கருதப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரு இஸ்லாமியவாதத் தாக்குதல் தாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் 14 பேர் நேற்று வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்ததற்கு ஒரு நாளிற்கு முன்னரே, சர்ச்சைக்குரிய குறித்த கேலிச் சித்தரங்கள் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் பிரபல கேலிச் சித்திர கலைஞர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். பரிசில் இந்தத் தாக்குதல் இடம்பெற்ற அடுத்த சில நாட்களில் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டு மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் சார்லி ஹெப்டோ சஞ்சிகையின் புதிய பிரதியின் முன் பக்கத்தில் முஹம்மது நபி தொடர்பில் 12 முந்தைய கேலிச் சித்திரங்கள் பிரசுரிக்கப்பட்டன.

இந்தக் கேலிச் சித்திரங்களில் ஒன்றில் முகம்மது நபி தலைப் பாகைக்கு பதிலாக தலையில் வெடி குண்டு அணிந்துள்ளார்.

இதில் “எல்லாம் இதற்காத்தான்“ என்று பிரெஞ்சு மொழியில் தலைப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad