இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் ஊடாக கொரோனா ஏற்படாது - தொற்று நோய் விஞ்ஞான பிரிவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 29, 2020

இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் ஊடாக கொரோனா ஏற்படாது - தொற்று நோய் விஞ்ஞான பிரிவு

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் ஊடாக கொவிட்-19 வைரஸ் (கொரோனா) பரவக்கூடிய அனர்த்த நிலை இல்லை என்று தொற்று நோய் தொடர்பான விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதேபோன்று கொவிட்-19 வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் 3 நாட்களுக்கு மாத்திரமே உயிர்வாழக்கூடும் என்று தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுவாசத்தின் ஊடாக மாத்திரமே இது ஒருவரின் உடலில் தொற்றக்கூடும். உணவு ஊடாக இது பரவாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உணவின் ஊடாக இந்த வைரஸ் தொற்றக்கூடும் என்ற சந்தேகம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உணவின் ஊடாக இந்த நோய்த் தொற்று ஏற்பட்டதாக இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்றும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad