மரண தண்டனை கைதியை பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் கலந்து கொள்வதற்கு இடமளிப்பது தவறான எடுத்துக்காட்டு - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

மரண தண்டனை கைதியை பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் கலந்து கொள்வதற்கு இடமளிப்பது தவறான எடுத்துக்காட்டு - மனுஷ நாணயக்கார

விக்கினேஸ்வரனின் கருத்து தவறானது, ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் : மனுஷ  நாணயக்கார - News View
(செ.தேன்மொழி) 

மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் கலந்து கொள்வதற்கு இடமளிப்பது தவறான ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அது தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இரத்தினபுரி நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நியமனம் வழங்குவதற்காக அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இந்நிலையில் அவர் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது பிழையான கருத்தை ஏற்படுத்திவிடும். 

மரண தண்டனை கைதி ஒருவருக்கு அரசியலமைப்பின் 89 ஆவது சரத்துக்கமைய அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட தினத்திலிருந்து பிரஜாவுரிமை இல்லாமலாக்கப்படுவதுடன், அவரால் எந்த தேர்தல்களின் போதும் வாக்களிக்க முடியாது. 

இதேவேளை அரசியலமைப்பின் 91 ஆவது சரத்துக்கமைய வாக்களிப்பதற்கான உரிமை இல்லாத ஒருவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கப் பெறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவர் எவ்வாறு பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான சூழ்நிலையில் மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தால், எதிர்வரும் காலங்களில் கொலை, போதைப் பொருள் கடத்தல், துஷ்பிரயோகங்கள் செய்து பல வருட காலம் சிறையில் இருந்தவர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. 

அதனால் இது எதிர்வரும் சந்ததியினருக்கு பிழையான அபிப்ராயத்தை ஏற்படுத்தலாம். அதனால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன. இந்த விவகாரம் தொடர்பில் அவரது நிலைப்பட்டை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment