தெமோதர ஒன்பது வளைவுப் பாலத்தை தேசிய மரபுரிமை தளமாக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

தெமோதர ஒன்பது வளைவுப் பாலத்தை தேசிய மரபுரிமை தளமாக்க தீர்மானம்

பதுளை மற்றும் தெமோதரவுக்கு இடையிலான ரயில் பாதையில் காணப்படும் தெமோதர ஒன்பது வளைவுப் பாலம் தேசிய மரபுரிமையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, புதிய நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலாசார இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.

குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு 2021ஆம் ஆண்டு குறித்த பாலம் தேசிய மரபுரிமையாக வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1921 ஆம் ஆண்டு மலையக ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டபோது 300 அடி நீளமும் 25 அடி அகலமும் 80 அடி உயரமும் கொண்ட குறித்த பாலம் கல், செங்கல் மற்றும் சீமெந்து கொண்டு நிர்மாணிக்கப்பட்டது.

இந்த பாலம் ‘ஒன்பது வானம்’ பாலம் எனச் சுற்றுலாப் பயணிகளினால் அழைக்கப்படுவதோடு, இந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment