ஒற்றுமைப்பட்டுச் செயற்படுகின்ற பொழுது கல்குடா முஸ்லிம்கள் பிரதிநிதியைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் - பொறியியலாளர் ஷிப்லி பாறூக் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 5, 2020

ஒற்றுமைப்பட்டுச் செயற்படுகின்ற பொழுது கல்குடா முஸ்லிம்கள் பிரதிநிதியைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் - பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து நல்ல தலைவர்களை தெரிவு  செய்ய வேண்டும் - பொறியியலாளர் ஷிப்லி பாறூக் - News View
எம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehorline)

மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிக வாக்காளர்களைக் கொண்ட கல்குடா முஸ்லிம் பிரதேசம் கடந்த காலத்தவறுகளை திருத்தி ஒற்றுமைப்படுவதனூடாக தம் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள முடியுமென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். 

கடந்த 03.09.2020ம் திகதி வியாழக்கிழமை தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்ட வேளை மேற்படி கருத்தைத்தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகளவு முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாக கல்குடா காணப்பட்ட போதிலும், அவர்கள் தங்களின் பிரதிநிதியை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியூடாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் எதிர்பார்ப்பும் அதிகம் காணப்பட்ட நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட வேட்பாளர் வெல்ல முடியாதென்ற சூழ்நிலையில், தான் வெல்லாவிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் வெல்லக்கூடாதென்ற நிலைப்பாட்டில் தனது குட்டி இராஜ்ஜியத்தை தக்க வைத்துக் கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் பிரதிநிதித்துவம் இழக்க காரணாமாக அமைந்தது. 

அத்துடன், கல்குடாத் தொகுதி அதிகளவிலான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட பரந்த பிரதேசமாக இருப்பதன் காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களின் ஆதிக்கமும் அவர்களினால் வாக்கு கலைக்கப்பட்டமையும் அவர்களுக்கான பிரதிநிதியை இல்லாமல் செய்தது எனலாம். 

அதேநேரம், கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு பெருமளவிலான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி அவர்களுடன் இல்லாததன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி மாவட்டத்தில் ஆசனத்தைப் பெறாதென்பதை நாம் தெளிவாகக் கூறியிருந்தோம். 

எதிர்காலத்தில் மேற்சொன்ன காரணங்களைக் கவனத்திற்கொண்டு ஒற்றுமையுடன் செயற்பட்டால், மாவட்டத்தில் அதிகளவான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ள கல்குடாத் தொகுதி முஸ்லிம்கள் தங்களுக்கான பிரதிநிதியை முஸ்லிம் காங்கிரஸுடாக பாதுகாத்துக் கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment