கல்குடாத் தொகுதி முஸ்லிம்கள் ஒரு தேவநாயகத்தையோ, நல்லையாவையோ தெரிவு செய்ய வேண்டும் - கலாநிதி ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 5, 2020

கல்குடாத் தொகுதி முஸ்லிம்கள் ஒரு தேவநாயகத்தையோ, நல்லையாவையோ தெரிவு செய்ய வேண்டும் - கலாநிதி ஹிஸ்புல்லாஹ்

ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் - அரச உயர்தரப்புடன் பேசப்படும் - ஹிஸ்புல்லாஹ்  ~ Jaffna Muslim
எம்.ஐ.லெப்பைத்தம்பி (thehotline)

ஜனாதிபதியின் எண்ணப்படி தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை கொண்டு வரப்படுமாக இருந்தால், கல்குடாத் தொகுதியில் 35% வீதமாகக் காணப்படும் முஸ்லிம்கள் ஒரு தேவநாயகத்தையோ, நல்லையாவையோ தெரிவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகுமென முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். 

04.09.2020ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற "நடந்தது என்ன....? - கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உங்களுடன் பேசுகிறார்" மக்களுக்கு தெளிவூட்டும் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

காத்தான்குடி மாநகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜே.பி. தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில், தற்போது 19 வது நீக்கப்பட்டு 20 வது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் 20 வதும் நீக்கப்பட்டு 21 வதும் வரலாம். அல்லது 22 வது திருத்தம் இன ரீதியான சட்டங்களாக கொண்டு வரப்படலாம். 

அதேநேரம், ஜனாதிபதி தனது முதலாவது பாராளுமன்ற உரையிலே அடுத்து வரும் தேர்தல்கள் தொகுதிவாரியாக நடைபெறுமென்பதை உறுதிப்படுத்துகிறேன் என தெளிவாகக் குறிப்பிட்டார். 

தற்போதுள்ள அரசியல் யாப்பு சுமார் 42 வருடங்கள் பழமையானது. இதற்கு 20 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே, கால மாற்றத்திற்கேற்ப புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் நோக்கில் புதிய அரசியல் உருவாக்க சபையினையும் ஜனாதிபதி நியமித்துள்ளார். 

அவ்வாறு தொகுதி ரீதியான தேர்தல் கொண்டு வரப்படுமாக இருந்தால், மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்குடாத் தொகுதியில் 35% வீதமாகக் காணப்படும் முஸ்லிம்கள் ஒரு தேவநாயகத்தையோ, நல்லையாவையோ தெரிவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகும். 

கல்குடாத் தொகுதியிலுள்ள முஸ்லிம்கள் நூறு வீதம் ஒற்றுமைப்பட்டாலும், 65% வீதம் தமிழ் மக்கள் உள்ள கல்குடாத் தொகுதியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள முடியாது. 

அதேநேரம், மட்டக்களப்புத் தொகுதியில் அறுபதாயிரம் முஸ்லிம் வாக்குகளை வைத்துக் கொண்டு, சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் தமிழ் வாக்குகள் உள்ள நிலையில், ஒரு முஸ்லிம் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள முடியாது. 

ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் ஒன்றுபட்டாலும் இரண்டு தொகுதிகளிலும் முஸ்லிம் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. அதேநேரம், முஸ்லிம்களுக்குள் ஒற்றுமை ஏற்படுவதென்பது சாத்தியமாகுமா? சிந்திக்க வேண்டியுள்ளது. 

துரோகிகளையும் விரோதிகளையும் வைத்துக் கொண்டு நாம் எவ்வாறு எதிர்காலத்தில் அரசியலை முன்கொண்டு செல்ல முடியும்? மிகக் கவனமாக சிந்திக்க வேண்டிய நிலையில் மக்களாகிய நீங்கள் உள்ளீர்கள். 

ஆகவே, முஸ்லிம் பிரதிநித்துவத்தைப் பாதுகாக்கின்ற ஒரு தொகுதி முறை உருவாக்கப்பட வேண்டும். இவைகள் உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால், நாம் அரசாங்கத்துக்குள் அமைச்சர்களாக இருக்க வேண்டும். இது எனக்கான தேவையல்ல. நான் போட்டியிட வேண்டுமென்பதற்காக அல்ல. உலகம் அழியும் வரை இந்த முஸ்லிம் சமூகம் வாழ வேண்டுமென்பதற்காக. 

சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு, மார்க்க விழுமியங்கள் முக்கியமானவை. நானூறு வருடம் பழமையான முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் எமது பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment