ஹிஸ்புல்லாஹ், மங்கள, ஹர்ஷ, திலும், பூஜித் ஆணைக்குழுவில் ஆஜர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

ஹிஸ்புல்லாஹ், மங்கள, ஹர்ஷ, திலும், பூஜித் ஆணைக்குழுவில் ஆஜர்

ஹிஸ்புல்லாஹ் மீண்டும் ஏப். 21 தாக்குதல் ஆணைக்குழு பொலிஸ் பிரிவில்-Hizbullah-Harsha-Dilum-Mangal-Pujith to Easter Sunday Attack PCoI
முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று (08) இரண்டாவது நாளாக முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

நேற்று அவரிடம் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் 9.30 மணியளவில் அவர் குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் வாகன ஒமுங்குறுத்துகை, பேருந்துப்‌ போக்குவரத்துச்‌ சேவைகள்‌ மற்றும்‌ புகையிரதப்‌ பெட்டிகள்‌ மற்றும்‌ மோட்டார்‌ வாகன கைத்தொழில்‌ இராஜாங்க அமைச்சர்‌ திலும் அமுணுகம, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.

அத்துடன், கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (08) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad