கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைக்க வேண்டும் - சுகாதார அமைச்சர் பவித்ரா - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 15, 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைக்க வேண்டும் - சுகாதார அமைச்சர் பவித்ரா

கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் பரவாமல் தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்திட்டங்களுக்கு நாட்டு மக்கள் தொடர்ந்தும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் ஒன்றிணைந்து வெற்றிகரமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததாலேயே நாட்டில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடிந்துள்ளது எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அவ்வாறு வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட நாட்டை தொடர்ந்தும் வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் தாமும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் அறிவு பூர்வமாக செயற்படவேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் வகையில் “புதிய வாழ்க்கை முறை” என்ற தொனியில் சுகாதார அமைச்சினால் பிரசார வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பில் சகல இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களிலும் பிரசாரம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment