மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது

மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் புத்தளம், கருவலகஸ்வௌ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், கருவலகஸ்வௌ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரிகள் நேற்று (13) கருவலகஸ்வெ பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் 2 (தொப்பி) துப்பாக்கிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கருவலகஸ்வௌ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட வெடிமருந்து பொருட்களும் வனவிலங்கு குற்றங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

புத்தளம் நிருபர் ரஸ்மின்

No comments:

Post a Comment

Post Bottom Ad