38 வயது பெண்ணுக்கு பிள்ளை பேருக்கு காரணமான 19 வயது இளைஞனுக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

38 வயது பெண்ணுக்கு பிள்ளை பேருக்கு காரணமான 19 வயது இளைஞனுக்கு விளக்கமறியல்

திருகோணமலையில் 38 வயதுடைய பெண்ணொருவருடன் தகாத உறவு கொண்டு பிள்ளை பேருக்கு காரணமாக அமைந்த இளைஞர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (14) உத்தரவிட்டார்.

வரோதயநகர், புதுக்குடியிருப்பு, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரான 19 வயதுடைய இளைஞன் வசிக்கும் பகுதியிலே 38 வயதுடைய பெண்ணொருவர் தனிமையில் வசித்து வந்த நிலையில் அப்பெண்ணுடன் சந்தேக நபர் நீண்ட காலமாக பழகி வந்த நிலையில் தவறான பாலியல் நடவடிக்கைகள் மூலம் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையினால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் அப்பெண்ணிடம் விசாரனைகள் மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad