தலைவர் நியமனம் குறித்து ரணில், கருவிடம் கம்பஹா மாவட்டத்தால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 3, 2020

தலைவர் நியமனம் குறித்து ரணில், கருவிடம் கம்பஹா மாவட்டத்தால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

ஐ.தே.கட்சியில் கரு ஜனாதிபதி ரணில் பிரதமர் - Tamilwin
(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ருவன் விஜேவர்த்தனவை நியமித்து, 2025 இல் அரச அதிகாரத்தை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தர வேண்டும் என பியகம பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் பிரசன்ன சம்பத் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் கட்சியின் செயற்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் இன்று கம்பஹாவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பலம்பெரும் ஐக்கிய தேசிய கட்சி 74 ஆவது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கும் நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலைமையில் இருந்து கட்சியை பாதுகாக்க கிராம மட்டத்தில் இருந்து நடவடிக்கை எடுக்க வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு கட்சியின் செயற்குழு தெரிவித்திருக்கின்றது. 

கட்சி எதிர்கொண்டுள்ள இந்த பாதகமான நிலையில் இருந்து மீட்சி பெற கட்சிக்கு இளம் தலைவர் ஒருவர் தேவை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கட்சியின் கெளரவத்தை பாதுகாக்கக் கூடிய, கட்சியின் இளம் உறுப்பினர்களின் கோரிக்கைகளை செவிசாய்க்கக் கூடிய திறமையான இளம் தலைவர் ஒருவரே தற்போது கட்சிக்கு தேவை. அதற்கு தகுதியான தலைவராக ருவன் விஜேவர்த்தனவை நாங்கள் காண்கின்றோம். ருவன் விஜேவர்த்தன கட்சிக்காக பாரிய சேவை செய்தவர் என்பதுடன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நபராவார்.

அதனால் கட்சியின் செயற்குழு கட்சி தலைவரை தெரிவுசெய்யும்போது தற்காலிகமான தீர்மானங்களை மேற்கொள்ளாமல் நிலையான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கம்பஹா மாவட்டம் என்ற வகையிலும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் என்ற வகையிலும் நாங்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றோம். இல்லாவிட்டால் மீண்டும் கட்சிக்குள் பிரச்சினை ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment