சம்மாந்துறை பிரதேசத்தில் ”சுபீட்சத்தின் நோக்கு" வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு - News View

Breaking

Post Top Ad

Monday, September 28, 2020

சம்மாந்துறை பிரதேசத்தில் ”சுபீட்சத்தின் நோக்கு" வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு

ஐ.எல்.எம் நாஸிம் 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான "சுபீட்சத்தின் நோக்கு" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் சமூர்த்தி லொத்தர் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சமூர்த்தி விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நடப்படும் நிகழ்வு இன்று (28 ) மாலை இடம்பெற்றது.

இவ் ஏழு வீடுகளும் சமூர்த்தி லொத்தர் நிதியுதவியின் கீழ் தலா ஒரு வீட்டிற்கு இரண்டு இலட்சம் ரூபா செலவில் பூர்த்திசெய்யப்படவுள்ளன.

நிரந்தர வீடில்லாத, பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள புளோக் ஜே மேற்கு 1 இல் அடிக்கல் நடப்பட்டது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ், சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக், சம்மாந்துறை சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம்.சலீம், சம்மாந்துறை சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எம். அம்சார், சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்துவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad