அவுஸ்திரேலியா அரசுக்கு ‘பேஸ்புக்’ எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 2, 2020

அவுஸ்திரேலியா அரசுக்கு ‘பேஸ்புக்’ எச்சரிக்கை

பேஸ்புக் ஊடாக 24,40,000 ரூபா மோசடி: இருவர் கைது - Newsfirst
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகத் தளங்களில் அவுஸ்திரேலிய மக்கள், செய்தி வெளியீட்டாளர்கள் செய்தி பகிர்வதற்குத் தடை விதிக்கப்போவதாக அந்நிறுவனம் மிரட்டியுள்ளது.

போஸ்புக், கூகுள் இரண்டும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வழங்கும் செய்திகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டத்தை இந்த ஆண்டு அமுல்படுத்தப்போவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஜூலை மாதம் தெரிவித்தது. அதை எதிர்த்து பேஸ்புக் இவ்வாறு கூறியது.

அதுவே தனது இறுதி முடிவு என்று குறிப்பிட்ட பேஸ்புக் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவு அர்த்தமற்றது என்றும் அது அந்நாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கு உதவப்போவது இல்லை என்றும் கூறியது.

கடந்த ஆண்டு இறுதியில் பேஸ்புக், கூகுள் இரண்டையும் தானாக முன் வந்து செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

அதையடுத்து செய்தியாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கும் வகையில் அந்நாட்டுப் போட்டித்தன்மைக் கட்டுப்பாட்டு அமைப்பு அந்தச் சட்டத்தைப் பரிந்துரைத்தது.

No comments:

Post a Comment