பிரேமதிலகவுக்கு வலைவீசும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு - சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளருக்கு மீண்டும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 3, 2020

பிரேமதிலகவுக்கு வலைவீசும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு - சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

பொலிஸ் அதிகாரிகள் 35 பேருக்கு பதவியுயர்வு | Athavan News
(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ் ஆகியோர், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்தில் 4 ஆவது சந்தேக நபராக சி.ஐ.டி.யின் முன்னாள் பொலிஸ் அதிகாரி பிரேமதிலகவை சி.சி.டி. பெயரிட்டது.

ஷானி, மெண்டிஸை தொடர்ந்து 3 ஆவது சந்தேக நபராக, தற்போது நாட்டிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள, சி.ஐ.டி.யின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை ஏற்கனவே பெயரிட்டிருந்த சி.ஐ.டி. அவரை கைது செய்ய பிடியாணையையும் பெற்றுக் கொண்டது.

சந்தேகநபரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கை வழிநடத்தும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இன்றயைதினம் பிரேமதிலக எனும் அதிகாரியை கைது செய்யவுள்ளதாக அரிவித்த சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, அவர் வதிவிடத்தில் இல்லாத நிலையில் அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவொன்றினையும் பெற்றுக் கொண்டது.

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களை கைது செய்ய புதிதாக சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி, கொழும்பு குற்றத் தடுப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, கம்பஹா நீதிவான் மஞ்சுள கருணாரத்ன இதற்கான அனுமதியை வழ்னக்கினார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போதும் கைது செய்யப்ப்ட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ் ஆகியோரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தர்விட்டது.

கம்பஹா நீதிவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment