ஆணைக்குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படும் : அமைச்சர் பந்துல - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

ஆணைக்குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படும் : அமைச்சர் பந்துல

ராஜபக்ஷர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் அனைத்தும்  பெரும்பான்மையின மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளன : அமைச்சர் பந்துல - News ...
(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பல சந்தர்ப்பங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டன. 20 ஆவது திருத்தம் ஊடாக ஆணைக்குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இரத்து செய்யப்பட்டு 20 ஆவது திருத்த சட்ட மூல வரைபுக்கு அமைச்சரவை அங்கிகாரம் முழுமையாக கிடைக்கப் பெற்றுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையை சிறந்த ஒரு விடயமாகவே கருத வேண்டும்.

ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. ஆணைக்குழுக்களுக்கு வரம்புக்கு மீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டமையின் காரணத்தினால் அவை பொறுப்பற்றவாறு செயற்பட்டன.

20 ஆவது திருத்தத்தில் ஆணைக்குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படுதல் அவசியமாகும். ஆணைக்குழுக்களும் ஒரு தரப்பினருக்கு பொறுப்பு கூற வேண்டும். இல்லாவிடின் குழுசார் சர்வாதிகாரம் தோற்றம் பெறும் கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமையே காணப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad