புதன்கிழமைகளில் தமது அமைச்சுக்களில் கட்டாயம் அமைச்சர்கள் இருக்க வேண்டும்! - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

புதன்கிழமைகளில் தமது அமைச்சுக்களில் கட்டாயம் அமைச்சர்கள் இருக்க வேண்டும்!

பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும் புதன்கிழமைகளில் தமது அமைச்சுக்களில் கட்டாயம் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் அமைச்சுக்களில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் சந்திப்பு தினங்களில் அரச அதிகாரிகள் மக்கள் சந்திப்பு இடம்பெறும் புதன்கிழமை நாட்களில் அமைச்சுக்களில் இருப்பதில்லை என அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad