இராணுவ பின்னணியை கொண்டவரிடம் நிறைவேற்று அதிகாரம் சென்றால் பாரிய ஆபத்து - ராஜித்த சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

இராணுவ பின்னணியை கொண்டவரிடம் நிறைவேற்று அதிகாரம் சென்றால் பாரிய ஆபத்து - ராஜித்த சேனாரத்ன

(செ.தேன்மொழி) 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரம், இராணுவ பின்னணியை கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ போன்ற ஒருவர் கையில் கிடைக்கப் பெற்றால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தமட்டில் அவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் அரசியலில் முன்னேறி வந்தவர். நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள இவர் மக்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தை கொண்டு செயற்படுபவர். 

இந்நிலையில் எவ்வாறு மக்களின் விருப்பத்தை வெற்றி கொள்வது, எந்த சந்தர்ப்பத்தில் மக்கள் நாட்டின் தலைமைத்துவத்தின் மீது வெறுப்புக் கொள்வார்கள் என்ற விடயங்கள் தொடர்பில் நன்கு அறிந்துக் கொண்டுள்ளவர். அதனால், இவருக்கு இத்தகைய அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றால், அதில் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையில் கிடைக்கப் பெற்றால் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கூற முடியாது என்றார்.

No comments:

Post a Comment