இணையத்தள ஊடகவியலாளருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 1, 2020

இணையத்தள ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்

இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சதுரங்க டி அல்விஸிற்கு விளக்கமறியல் - Newsfirst
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சதுரங்க டி அல்விஸ் எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர் சேனாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான், விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சதுரங்க டி அல்விஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று (31) கைது செய்யப்பட்டார்.

பொரலஸ்கமுவையில் உள்ள வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு சொந்தமான கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவற்றையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செய்தி வௌியிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment