மரணத்தை கொலையாக்கியதாக விஜயகலாவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

மரணத்தை கொலையாக்கியதாக விஜயகலாவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (17) முற்பகல் 10.00 மணிக்கு அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டபோது, அவர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்று குளத்தில் குதித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில், குறித்த நபரின் மரணமானது இயற்கை மரணம் என்று நீதவான் நீதிமன்றத்தினால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் விஜயகலா மகேஸ்வரனின் தலையீட்டின் கீழ், குறித்த சம்பவம் தொடர்பில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, குறித்த சம்பவமானது ஒரு கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டு, குறித்த பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதற்கு எதிராக, பொலிஸ் அதிகாரியான மயூரன் ஞானலிங்கம் என்பவரின் மனைவியினால் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டு, இன்றையதினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment