சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பாக்கவில்லை என்கிறார் கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பாக்கவில்லை என்கிறார் கம்மன்பில

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது இந்த அரசியல் யாப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து 3 இல் 2 பெரும்பான்மையை பெறுவதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பொதுவாக யாப்பு திருத்தத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் அது தொடர்பான விடயத்தை அரசாங்கம் குறிப்பிடவில்லை. புதிய அரசியல் யாப்பிற்காக அவசியம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இது பொதுமக்களின் சொத்துக்களை வீண்விரயம் செய்யும் நடவடிக்கையாகும். 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் அமைச்சரவையில் இடம்பெற்றது. இது ஜனநாயக நடைமுறையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment