இலங்கை பிரஜைகள் எவரும் 7 நாட்களுக்குள் 20 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்த முடியும் - அமைச்சர் சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Sunday, September 6, 2020

இலங்கை பிரஜைகள் எவரும் 7 நாட்களுக்குள் 20 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்த முடியும் - அமைச்சர் சந்திரசேன

பொதுத் தேர்தலை பிற்போட வேண்டிய நெருக்கடியான சூழல் தற்போது தோற்றம் பெறவில்லை  - அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன - News View
(இராஜதுரை ஹஷான்) 

விருப்பு வாக்கு முறைமையினை இரத்து செய்து பொருத்தமான தேர்தல் முறைமையினை அறிமுகம் செய்யுமாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான 9 பேர் அடங்கிய குழுவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20வது திருத்த வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 7 நாட்களுக்குள் இலங்கை பிரஜைகள் எவரும் திருத்தத்தை உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியும் என காணி விவகார அமைச்சர். எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார். 

புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்து நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என மக்களுக்கு வாக்குறுதி 20வது திருத்தம் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய அரசியமைப்பு உருவாக்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே 20வது திருத்தத்தை நிறைவேற்ற எதிர்த்தரப்பினரது ஆதரவு அவசியமில்லை. 

20வது திருத்த சட்ட மூல வரைபு வர்த்தமாயில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமூல வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து 7 நாட்களுக்குள் இலங்கை பிரஜைகள் எவரும் வரைபினை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும். எவ்வித தடைகளுமின்றி 20வது திருத்தத்தை நிறைவேற்றுவோம். 

நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு முறைமை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பொருத்தமற்ற ஒரு தேர்தல் முறைமையாக காணப்படுகிறது. தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை எதிர்தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆகவே புதிய அரசியலமைப்பில் நாட்டுக்கு பொருந்தும் வகையில் தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும். 

முரண்பாடற்ற, நாட்டுக்கு பொருந்தும் தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்துமாறு புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராயும் 9 பேர் அடங்கிய குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தேர்தல் முறைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் 2014ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகம் செய்த தேர்தல் திருத்த முறைமையிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment