20 வது திருத்தத்தை யார் தயாரித்தது தொடர்பில் ஆராய்வதற்கான அவசியம் ஏதும் கிடையாது : அமைச்சர் நாமல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 15, 2020

20 வது திருத்தத்தை யார் தயாரித்தது தொடர்பில் ஆராய்வதற்கான அவசியம் ஏதும் கிடையாது : அமைச்சர் நாமல்

(இராஜதுரை ஹஷான்) 

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நாட்டு மக்கள் எவரும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். ஒரு இனத்தை இலக்காகக் கொண்டு 20 வது திருத்தம் கொண்டுவரப்படவில்லை. பல்லின மக்களின் அரசியல் அபிலாசைகளையும் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷதெரிவித்தார். 

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 வது திருத்தம் நாட்டுக்காக உருவாக்கப்பட்டதல்ல, அரசாங்கத்தின் தேவைக்காக அவசர அவசரமாக இயற்றப்பட்டது. இதன் பயனை மக்கள் பெற்றுக் கொள்ளவில்லை. முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெற்றன. 

நாட்டுக்கு பொருந்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டு, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு இதன் காரணமாகவே அரசியலைமப்பின் 19 வது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20 வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைபு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 20 வது திருத்த சட்ட வரைபை யார் தயாரித்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கான அவசியம் ஏதும் கிடையாது. நாட்டு மக்கள் எவரும் 20 வது திருத்தத்துக்கு எதிரான நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யலாம்.

No comments:

Post a Comment