2021 இல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவரா? - அகிலவிராஜ் விளக்கம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

2021 இல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவரா? - அகிலவிராஜ் விளக்கம்

அமைச்சர் அகிலவிராஜ் காவி தரிக்க வேண்டும் | Virakesari.lk
(நா.தனுஜா) 

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைத்துவம் உள்ளடங்கலாக கட்சி தொடர்பான விடயங்கள் குறித்த தீர்மானங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே எடுக்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய தலைவர் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியே நியமிக்கப்படுவார் என்று அக்கட்சியின் சட்டச் செயலாளர் நிஷாந்த நாணயக்கார அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 

தற்போது கட்சியில் வெற்றிடமாக உள்ள பிரதித் தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும், அவ்வாறு நியமிக்கப்படுபவர் எதிர்வரும் 2021 ஜனவரியில் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் அவர் மேலும் கூறியிருப்பதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. 

எனினும் இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திடம் வினவியபோது, அவ்வாறான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்பட்டிருப்பது குறித்து தான் அறியவில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad