வடக்கு, கிழக்கு இணைப்பே முஸ்லிம்களை பெரிதும் பாதித்தது - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 2, 2020

வடக்கு, கிழக்கு இணைப்பே முஸ்லிம்களை பெரிதும் பாதித்தது - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக தற்காலிகமாக ஏற்படுத்திக் கொடுத்த வடக்கு கிழக்கு இணைப்பே முஸ்லிம்களை பெரிதும் பாதித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளருமான ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கும் தேர்தல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இலங்கை - இந்திய உடன்படிக்கை மூலமாக வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டதன் விளைவாக முஸ்லிம்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. 

முழுமையாக கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதன் வலி இன்றும் உள்ளது. அவ்வாறான சூழலில்தான் நாம் அரசியலுக்கு வரவேண்டிய நிலைமையும் உருவாகியது. 

அப்போது ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நேரத்தில் இலங்கை இந்திய உடன்படிக்கையை நீக்கி மீண்டும் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை தக்கவைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய நாம் ரணசிங்க பிரேமதாசவை ஆதரித்தோம். 

அதன் மூலமாக அவர் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் ஜனாதிபதியான பின்னர் நாம் செய்த உதவியை மறக்கவில்லை. அப்போதும் அவருக்கு பல அழுத்தங்கள், அவப்பெயர் ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad