பாராளுமன்றத்திற்கு செல்வது தொடர்பில் ஆராய இருக்கின்றேன் - பசில் ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

பாராளுமன்றத்திற்கு செல்வது தொடர்பில் ஆராய இருக்கின்றேன் - பசில் ராஜபக்ஷ

பஷில் ராஜபக்ஷ ஆஜர் | Virakesari.lk
(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்களாயின் அது தொடர்பில் ஆராய தயாராக இருக்கின்றேன். எனினும் பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து நாட்டுக்கான சேவையை ஆற்றுவதையே சிறப்பானதாகக் கருதுகின்றேன். அதனையே நான் விரும்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தை விட அதற்கு வெளியிலிருந்து சேவை செய்வதை சிறப்பாகக் கருதுகின்றேன். எனினும் தேவை ஏற்படின், நான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அது பற்றி சிந்திக்கலாம். ஆனால் வெளியிலிருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதையே விரும்புகின்றேன்.

இதேவேளை புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ, அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காவே மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர். அதற்காகவே நாமும் மக்களிடம் மூன்றில் இரண்டைக் கோரினோம். எனவே அதனைச் செய்யாவிடின் மூன்றில் இரண்டைப் பெற்றது அர்த்தமற்றதாகிவிடும்.

பாராளுமன்றத்தில் 113 என பெரும்பான்மை கிடைத்திருந்தாலே எமக்கு போதுமானது. ஆனால் 150 என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்குமாறு மக்கள் எமக்கு ஆணை வழங்கியிருக்கின்றனர். எனவே புதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad