புதிய அரசியலமைப்பிற்கான வரைவு தொடர்பில் அமைச்சரவை தீர்மானிக்கும் - அமைச்சர் அலி சப்ரி - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

புதிய அரசியலமைப்பிற்கான வரைவு தொடர்பில் அமைச்சரவை தீர்மானிக்கும் - அமைச்சர் அலி சப்ரி

இனவாதம் தலைதூக்க ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார் என அலி சப்ரி  உத்தரவாதம் | தினகரன்
(எம்.மனோசித்ரா)

புதிய அரசியலமைப்பிற்கான வரைபினை சமர்பிக்கும் தினம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும். 19 ஐ நீக்குவது குறித்தும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விஷேட அவதானம் செலுத்தப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். இது தொடர்பில் அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும். 

19 ஐ நிறைவேற்றுவதில் முன்னின்று செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி, ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் சுமந்திரன் போன்றோர் அதனை நீண்ட காலம் நடைமுறைப்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

எனவே 19 இற்கு ஆதவளித்தவர்களே தற்போது அதனை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அதனடிப்படையிலேயே நாம் மக்களிடம் சென்றோம். மக்கள் அதற்காக எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். அது எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது பற்றி அமைச்சரவை தீர்மானிக்கும்.

19 ஆவது திருத்தத்தின் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள என்பதை மக்களும் நன்கு அறிந்துள்ளார்கள். புதிய அரசியலமைப்பிற்கான வரைபை எப்போது சமர்ப்பிப்பது என்பது பற்றியும் அமைச்சரவையே தீர்மானிக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad