வேறொரு நாட்டின் தேவையற்ற தலையீட்டினை அனுமதிக்க முடியாது, புத்தகப் பொதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

வேறொரு நாட்டின் தேவையற்ற தலையீட்டினை அனுமதிக்க முடியாது, புத்தகப் பொதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க குற்றச்சாட்டு

Dear Gevindu, Do You Remember Hemantha Chandrasiri?
எமது நாட்டிற்கு வேறு நாடொன்று தேவையற்ற முறையில் தலையீடு செய்வதை அனுமதிக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார். இவ்வாறான தலையீடு தொடர்பில் ஆராயுமாறும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்தார். 

பாராளுமன்றத்திற்கு முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை கடந்த 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இந்த பயிற்சிப்பட்டறையின் போது அமெரிக்காவின் தலையீடு காணப்பட்டமையினால், உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கெவிந்து குமாரதுங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வின் போது யூ.எஸ் எயிட் நிறுவன உத்தியோகபூர்வ சின்னம் பதித்த புத்தகம் அடங்கிய பொதியொன்றே எமக்கு வழங்கப்பட்டது. 

பாராளுமன்ற நிருபர்களுக்கும் யூ.எஸ் எயிட்ஸ் பயிற்சி முகாம்கள் நடத்தியுள்ளதாக ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு நாடொன்று தேவையற்ற முறையில் எமது நாட்டிற்கு தலையீடு செய்வதை அனுமதிக்க முடியாது.

வெளிநாட்டு செயற்பாடுகளில் தலையீடு செய்யும் யூ.எஸ் எயிட் போன்ற நிறுவனமொன்றினூடாக எம்.பிக்களுக்கு இவ்வாறு பொதி வழங்குவது உங்களுக்கு தெரிந்தா? இடம்பெற்றது. பாராளுமன்ற தொடர்பாளர் பிரிவிற்கு முன்னாள் டிரான்ஸ்பரன்ஸி நிறுவன பிரதானி நியமிக்கப்பட்டுள்ளார். எமது நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் முன்னாள் சபாநாயகர் வெளிநாட்டு சக்திகளுக்கு இடமளித்தது தொடர்பில் கவனம் செலுத்துவீர்களா? என்றும் குறிப்பிட்டார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க, பயிற்சிப்பட்டறையின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரிகளால் எங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு மற்றும் நிலையியற்கட்டளை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது, எமக்கு ஒரு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை அடங்கிய புத்தகமும் பேனையும் வழங்கியிருந்தனர். 

ACSA உடன்படிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் குறிப்பாக கடற்படையின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளாது 2017 ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் தலையிட்டதன் பின்னர், வௌிவிவகார அமைச்சின் செயலாளராக செயற்பட்டு ஓய்வு பெற்ற பின்னர், இந்த சபையின் முன்னாள் சபாநாயகரின் வெளிவிவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த செயற்பாடு பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கவில்லையா என பேராசிரியர் சன்னா ஜெயசுமனா அதே அமர்வில் கேள்வி எழுப்பியபோது, பாராளுமன்றத்தில் தகவல் தொடர்புத்துறையை மேம்படுத்த அமெரிக்க அரசு நிறைய பணம் செலவழித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. நம் நாட்டிற்கு எதிராக செயற்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் தலைவர், பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பு பிரிவில் அதிகாரியாக உள்ளார் என்பதையும் பயிற்சிப்பட்டறையின் போது பார்த்தோம். இறுதியாக சபாநாயகராக செயற்பட்டவரினாலே இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. 

கெளரவ சபாநாயகர் அவர்களே, நம் நாட்டில் தேவையின்றித் தலையிடும் வௌிநாட்டின் ஒரு நிறுவனத்திற்கு பதவி வழங்கியுள்ளமையை நீங்கள் அறிவீர்களா? இந்த விடயம் தொடர்பில் பூரண கவனம் செலுத்துவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்குப்பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தின் சுயாதீனத்திற்கோ எம்.பிக்களுக்கோ அழுத்தம் பிரயோகிக்க இடமளிக்க மாட்டோமென்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment