பிரதமர் மஹிந்தவுக்கு பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து - பாகிஸ்தானுக்கு வருமாறும் அழைப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, August 8, 2020

பிரதமர் மஹிந்தவுக்கு பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து - பாகிஸ்தானுக்கு வருமாறும் அழைப்பு

Jaffna Muslim
தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளமைக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தொடர்புகொண்ட இம்ரான் கான் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரசுக்கு எதிரான தனது நாட்டின் மூலோபாயம் குறித்தும், குறிப்பாக மக்களை பாதுகாப்பதற்காக வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு உயிரூட்டுதல் குறித்தும் இம்ரான்கான் கருத்துப் பரிமாறியுள்ளார். 

இலங்கையின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து எடுத்துரைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அதன் காரணமாக சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படாதது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனைத்து துறைகளிலும் பாகிஸ்தானின் ஒத்துழைப்பை பாகிஸ்தானின் பிரதமர் வழங்கியுள்ளார். கூடிய விரைவில் பிரதமரை பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad