அரசியல் மூலமாக ஒரு சதத்தையேனும் அடைய மாட்டேன் - முஷர்ரப் முதுநபீன் உறுதி - News View

Breaking

Post Top Ad

Saturday, August 8, 2020

அரசியல் மூலமாக ஒரு சதத்தையேனும் அடைய மாட்டேன் - முஷர்ரப் முதுநபீன் உறுதி

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் முதலாவதாக வாகன பேர்மிட் வரும் அதில் இரண்டு கோடி, மூன்று கோடி என்று உழைத்துக் கொள்வார்கள். எனவே, நான் அல்லாஹ்வின் மாளிகையில் இருந்து சத்தியமிட்டு வாக்குறுதி வழங்குகிறேன் இந்த அரசியலால் ஒரு சதமும் என் உடம்பில் சேர விடமாட்டேன் என்று திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஷர்ரப் முதுநபீன் தெரிவித்தார். 

வெற்றி பெற்ற பின்னர் பள்ளிவாயலுக்குச் சென்று வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு மக்களுடன் உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

‘நான் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறேன் எனக்கு இருக்கின்ற ‘கோட்’ போதும் நான் உழைத்து என்னுடைய குடும்பத்தை என்னையும் காப்பாற்றிக் கொள்வேன். என்னுடைய நோக்கம் இந்த சமூகம் வெற்றி பெற வேண்டும் அதற்கான வழியை அல்லாஹகாட்டித் தந்துள்ளான்’ - என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad