புதிய அரசியலமைப்பில் ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் : கபே அமைப்பு வலியுறுத்தல் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

புதிய அரசியலமைப்பில் ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் : கபே அமைப்பு வலியுறுத்தல்

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கபே வலியுறுத்தல் - FAST NEWS
(எம்.மனோசித்ரா)

புதிய அரசியலமைப்பில் நீதி, அரச, பொலிஸ் மற்றும் தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் ஆணைக்குழுக்கள் பற்றி வௌ்வேறு நிலைப்பாடுகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வினை வழங்குவது அதிகாரங்களை நீக்குவதன் மூலமல்ல. அதிகாரங்களை பலப்படுத்துவதன் மூலமாகும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் மூலம் நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே ஆணைக்குழுக்கள் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கான தீர்வுகளை வழங்குவது ஜனநாயகத்தை மதிக்கின்ற அரசாங்கத்தின் கடமையாகும்.

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் எவ்வித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக தேர்தலை நடத்த முடிந்தமைக்கான காரணம் தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டமையாலே ஆகும். ஜனநாயக நாட்டில் பிரஜையொருவரின் உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad