வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் சவுதி அரேபிய மன்னர் - News View

Breaking

Post Top Ad

Saturday, August 1, 2020

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் சவுதி அரேபிய மன்னர்

சவுதி அரேபிய மன்னர் சல்மான் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு வைத்தியசாலையில் இருந்து அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.

சவுதி அரேபியாவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருபவர் சல்மான் பின் அப்துல் அஸீஸ். 84 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மன்னர் சல்மானுக்கு பித்தப்பை அழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராயல் கோர்ட்டு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மன்னர் சல்மானுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அவரது பித்தப்பை அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை லேபராஸ்கோபிக் எனப்படும் குறைந்த ஆபத்துடைய செயல் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மன்னர் சல்மானின் உடல்நிலை நல்ல முறையில் தேறி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்.

சவுதி அரேபியா மக்கள் நேற்று ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடிய நிலையில் மன்னர் சல்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நல்ல செய்தி கிடைத்துள்ளதாக ராயல் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad